கோவை மாநகர காவல் குடியிருப்புகளில் நவீன டோல்கேட்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.!

கோவை மாநகர காவல்ஆயுதப்படை குடியிருப்புநுழைவு வாயிலில் நவீன டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதில் அந்த வழியாக குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்கள், புகைப்படம் ,வருகை நேரம் தானாக பதிவு செய்யப்படுகிறது. அனுமதி பெறாத வாகனங்களை அடையாளம் காட்டக் கூடியது. இது மின்சாரம் மற்றும் யு.பி.எஸ். மூலம் இயங்கக் கூடியது. இதன் மொத்த விலை ரூ. 3 லட்சம் ஆகும். இந்த நவீன டோல்கேட் அறிமுக விழா காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலையில் நடந்தது . போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை தொடங்கி வைத்தார். ஆயுதப் படை உதவி கமிஷனர் சேகர் ,இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங் பங்கேற்றனர்..