வேலூர்‌ மத்திய சிறையில்‌ இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம்‌ துவக்கம்.!!

தற்போது தமிழ்நாடு சிறைகளில்‌ யோகா பயிற்சி, விளையாட்டுகள்‌ மற்றும்‌ இசை வாசிப்பு ஆகிய செயல்பாடுகளின்‌ மூலமாக இல்லவாசிகளை சீர்திருத்த முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்‌ தொடர்ச்சியாக வேலூர்‌ மத்திய சிறையில்‌ காவல்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ தலைமை இயக்குநர்‌, சிறைகள்‌ (ம) சீர்திருத்தப்பணிகள்‌ துறை  அமரேஷ்‌ புஜாரி உத்தரவு மற்றும்‌ வழிகாட்டுதலுக்கிணங்க வேலூர்‌ தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன்‌ இணைந்து “இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம்‌” நேற்று (01.05.2023) துவக்கி வைக்கப்பட்டது.

மேலும்‌ இதன்‌ துவக்க விழாவிற்கு தலைமை விருந்தினர்களாக வேலூர்‌ தொழில்நுட்ப கல்லூரியின்‌ துணை தலைவர்கள்‌  சங்கர்‌ விஸ்வநாதன்‌ மற்றும்‌  செல்வம்‌ ஆகியோர்கள்‌ கலந்து கொண்டு கணினி பயிற்சி மையத்தை துவக்கி வைத்தனர்‌.  இந்த விழாவிற்கு வேலூர்‌ சரக சிறைத்துறை துணைத்தலைவர்‌  செந்தாமரைக்கண்ணன்‌ முன்னிலை வகித்தார்‌. மேலும்‌ இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர்‌ மத்திய சிறை கண்காணிப்பாளர்‌  அப்துல்‌ ரஹ்மான்‌  செய்து வைத்தார்‌.
இந்த கணினி பயிற்சி மையம்‌ மூலமாக இல்லவாசிகளுக்கு எம்.எஸ்.ஆபிஸ் பற்றிய பயிற்சி பயிற்றுவிக்கப்படும்‌. இதன்‌ மூலம்‌ இல்லவாசிகள்‌ சிறையில்‌ உள்ள தண்டனை காலங்களை பயனுள்ளதாக செலவிட்டு தங்களது கணிப்பொறி திறனை மேம்படுத்த முடியும்‌. மேலும்‌ இந்த கணினி பயிற்சி பெறும்‌ சிறைவாசிகள்‌ விடுதலைக்கு பிறகு சுயமாக தொழில்‌ துவங்கவும்‌ தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான வருவாயை ஈட்டிக்கொண்டு சமூகத்தில்‌ சிறந்த மனிதனாக வாழ முடியும்‌ என்பதில்‌ எந்தவித ஐயமும்‌ இல்லை..