14 வயது மாணவியை மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம்- கேவலமான செயலை செய்த பெரியப்பா போக்சோவில் கைது

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட அந்த மாணவி தனது பெரியப்பா தன்னை மிரட்டி பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.இதுகுறித்து, சைல்டு ஹெல்ப்”பிரிவில் புகார் செய்யப்பட்டது.அவர்கள் விசாரணை நடத்தியதில் இது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து கணபதிபுதுரை சேர்ந்த அவரது பெரியப்பா பாலசுப்பிரமணியம் (வயது 50) என்பவரை நேற்று கைது செய்தார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.