உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 100% வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு..!

உதகை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரியில் அதன் ஒரு பகுதியாக உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் உறுதிமொழி  ஏற்கும் நிகழ்ச்சி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சிக்கு துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண்,நிகழ்வின் செயலர்கள் முனைவர் கௌசல்யா,முனைவர் முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாணவ மாணவிகளிடையே பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை.எந்வொரு வாக்காளரும் விடுபடக்கூடாது. பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம் என சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நூறு சதவீதம் வாக்களிப்போம் தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற வாக்குறுதிகளை உறுதிமொழியாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்..