குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.!

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ல் நடந்து முடிந்தது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான வாக்குகளை திரவுபதி முர்மு கடந்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் தனது திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.