அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை :சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் சபரிவாசன் (வயது24) இவர் சின்ன தடாகத்தில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள மாடியில் தங்கி இருந்தார் .அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவரது அண்ணன் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த சபரிவாசனும் அதே போல தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது..