மளிகை கடையில் பதுக்கி வைத்த 102 கிலோ குட்கா பறிமுதல் – கோவை வியாபாரி கைது..!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிருஷ்ணாலே – அவுட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 35) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா), பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது 102 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ 1லட்சத்து 2 ஆயிரம் இருக்கும் .இது தொடர்பாக ஜெயமுருகன் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.