கோவை ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

கோவை பெரிய கடை வீதி- ஒப்பணக்கார வீதி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதில் பெரிய கடை வீதியில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வாகனங்களில் செல்வோர் , நடந்து செல்பவர்கள் மெயின் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு போலீஸ்காரர் ஒருவர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். ஆனாலும் வாகன ஓட்டிகளின் அவசரம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்த பிரச்சனைக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீர்வு காணப்பட்டது. நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சாலை சந்திப்பு பகுதியில் சாலையின் இரு புறமும் போலீசார் நின்று கயிற்றை பிடித்து வாகனங்களை நிறுத்தி ஒழுங்குபடுத்தி அனுப்பி விடுகின்றனர். போக்குவரத்து சீராக செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காலை மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் போது நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸ்காரர்கள் சாலையின் இருபுறமும் நின்று கயிறை பிடித்து வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து சீராக செல்ல நடவடிக்கை எடுத்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது..