126 வது மலர் கண்காட்சி… உதகை அரசு தாவரவியல் பூங்கா தயார்படுத்தும் பணி தீவிரம்..!

நீலகிரி மாவட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மலர் கண்காட்சியினை வரவேற்கும் விதமாக இவ்வாண்டும் 126வது மலர் கண்காட்சி
வரும் 10.05.2024 முதல் 20.05.2024 வரை (11 நாட்கள்) வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதனை கருத்திற்கொண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்த்தொட்டிகள் மலர்க்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அரசு தாவரவியல் பூங்காவில் 250 க்கு மேலான பூங்கா பணியாளர்கள் வண்ணமலர் தொட்டிகளை மலர் காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்,

ஒவ்வொரு ஆண்டும் மலர்க்கண்காட்சிக்காக டிசம்பர் மாதத்தில் இருந்து மலர்களை நடவு செய்யும் பணிகள் 300க்கும் மேலான பூங்கா பணியாளர்கள் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அதனை வெகு சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வரப்படுகிறது, இந்தப் பூக்கள் போக்குவதற்கு தோட்டக்கலைத் துறை மற்றும் பூங்கா பணியாளர்களின் கடின உழைப்பு முக்கிய பங்கு ஆகும்.
இவ்வாண்டு சிறப்பம்சமாக 35000 மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய இரக ஆர்னமென்டல்கேல், ஓரியண்டல்லில்லி,
ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டிடப்ட், பிரன்ச்மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், டயான்தஸ், ஆஸ்டர் பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 75 இனங்களில் 388 வகையான இரகங்கள் சுற்றுலா
பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 இலட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. இவ்வாண்டு மலர்க்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் சுமார் 10000
பல வகையான வண்ண மலர்த்தொட்டிஅலங்காரங்கள் காண்போருக்கு குளிர்ச்சி தரும் வகையில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாண்டு சிறப்பம்சமாக மலர்க்காட்சிக்கு 1020 அன்று Laser Light Show காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்த போது இந்த வருடம் மலர் கண்காட்சி முன்கூட்டியதாகவே துவங்கப்பட உள்ளன, மே 10ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது, தொடர்ந்து ரோஜா பூ கண்காட்சி மே 10ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது, மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழ கண்காட்சி 24 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி முடிவு பெறும் என்று கூறினார், மற்றும் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு டிக்கெட் 150 ரூபாய் அதிகமான தொகை என்பதை நடுத்தர மக்கள் சுற்றுலாப் பயணிகள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் என்று, செய்தியாளர் கூறினார். அதற்கு பதில் அளித்த ஆட்சியர் பூங்கா பராமரிப்புக்காக இத்தொகை வாங்கப்படுகிறது என்றார். ஆனால் பூங்கா இவ்வாண்டு சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்கா கழிவறைகள் மற்றும் புல் தரைகள் சீரான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் நடுத்தர மக்கள் 150 ரூபாய் நுழைவுத்தொகை கொடுத்து பூங்காவை சுற்றி பார்ப்பது சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது??