ஓடும் பேருந்தில் 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது.!!

சென்னை எம்ஜிஆர் நகர் குண்டலகேசி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மாநகர பேருந்தில் கண்டக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி வயது 40 உறவினர் வீட்டு திருமணத்தில் பந்தாவாக சென்று அசத்த வேண்டும் என்ற ஆசையில் 18 சவரன் தங்கச் சங்கிலியை ஆசை ஆசையாக அணிந்து கொண்டு சென்றாராம். திருமணம் முடிந்த கையோடு தான் அணிந்திருந்த 18 சவரன் தங்க நகைகளை கழற்றி கைப்பையில் வைத்துக் கொண்டாராம் . கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் மூலம் வீடு திரும்புவதற்காக ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே பஸ்ஸில் இருந்து இறங்கிய ராஜலட்சுமி கைப்பையை காணாமல் அலறி துடித்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர்கள் தங்க நகைகளை அபேஸ் செய்துள்ளனர். எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் செய்தார் . புகாரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மாநகர பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ராஜலட்சுமியிடம் தங்க நகைகளை கொள்ளை அடித்தது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விமலா வயது 30 குண்டு விமலா என தெரிய வந்தது . அவள் வேலூரில் தங்கி இருப்பது தெரியவந்து . இவள் ஓடும் பஸ்ஸில் கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவள் என்று கூறப்படுகிறது. இவள் சென்னை நகரில் ஓடும் பஸ்ஸில் எந்தெந்த வழித்தடத்தில் கை வரிசையை காண்பித்துள்ளாள் என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அலசி ஆராய்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் . அவள் கொள்ளை அடித்த 18 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர்..