இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வர்த்தக ஒப்பந்தம்: 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை..!

சென்னை:”இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; கூடுதலாக, 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்,” என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி தெரிவித்தார். இந்தியா — ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. வரி விலக்கு நிகழ்ச்சியில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை செயலர் பாலாஜி பேசியதாவது:இந்தியா – ஆஸ்திரேலியா, இந்தியா — கனடா இடையே பொருளாதார கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், 2022 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தம், டிச., 29ல் அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக, இந்தியாவில் இருந்து, ஆஸ்திரேலியாவுக்கு சுங்க வரி இன்றி ஏற்றுமதி செய்யப்படும்.ஜவுளி, விவசாயம் மற்றும் மீன் பொருட்கள், தோல், காலணிகள், மரச்சாமான்கள், நகைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகள் உட்பட, 10 துறைகள் தொடர்புடைய பொருட்களுக்கு, உடனடி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும்; 81 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் கூடுதல் ஏற்றுமதி வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். கடல் உணவுஆஸ்திரேலியா துணை துாதர் சாரா கிர்லீவ் பேசியதாவது:ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 90 சதவீதம் பொருட்களுக்கு, சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 85.3 சதவீத பொருட்களுக்கு உடனடியாகவும், 3.67 சதவீத பொருட்களுக்கு, மூன்று, ஐந்து, ஏழு மற்றும் 10 ஆண்டுகள் என, படிப்படியாக வழங்கப்பட உள்ளது.இதில், நிலக்கரி, ஒயின், கடல் உணவு பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.817 கோடி ரூபாய்இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, 2020 – 21ல், தோல் மற்றும் காலணி பொருட்கள் ஏற்றுமதி, 506 கோடி ரூபாயாக இருந்தது.இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 817 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தக இயக்குனரகத்தின் மண்டல கூடுதல் இயக்குனர் ஜெனரல் ராஜலட்சுமி தேவராஜ், ஏற்றுமதி ஆய்வு முகமை துணை இயக்குனர் ஜெயபாலன், ஏற்றுமதி கடன் உத்தரவாக கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் சுபாஷ் சாஹர் உட்பட பலர் பங்கேற்றனர்.