மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கோவிலுக்கு வரும்போது பொதுமக்கள் அநாகரிகமான உடைகள் அணிந்து வருவது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியிருந்ததுடன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடட்டுள்ளது.
மேலும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டதுடன், அதேபோல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்ட நீதிபதிகள், கோவிலுக்கு வரும்போது பெண்கள் அநாகரிகமான உடைகள் அணிந்து வருவது வேதனை தருவதாகவும், கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply