துடியலூர் -வடவள்ளி போலீஸ் நிலையம் கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் இணைப்பு.!!

கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் கடைவீதி, ஆர் எஸ் புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர் .பீளமேடு, ராமநாதபுரம் , வெரைட்டி ஹால் ரோடு ,சரவணம்பட்டி செல்வபுரம், சாய்பாபா காலனி ,உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ரத்தினபுரி ஆகிய 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர புதிதாக சுந்தரபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் உருவாக்கப்பட்டன இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர பகுதியில் இருந்து மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் மாநகர பகுதிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன .இது தொடர்பாக அரசுக்கு அனுமதி கடிதம் எழுதப்பட்டது.இதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்களை கோவை மாநகர போலீஸ் எல்லையுடன் இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள் மாநகர கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்படும் .எந்த உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் கீழ் வரும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் .கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் 35 போலீஸ் நிலையங்கள் இருந்தன. அதில் 2 போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதால் தற்போது 33 போலீஸ் நிலையங்களாக குறைந்துள்ளது. துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என கூறினார்கள்..