ரூ.90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி செட்டில்மெண்ட் மூலம் ஏமாற்றிய பிராடு கைது.!!

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் 65 சென்ட் நிலம் 10 ஏக்கர் நிலமும் குடும்ப சொத்து உள்ளது. இதுகுறித்து வி. சகிலா ராகவன் தெரு பகுதியில் வசிப்பதாகவும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை பணிவோடு சந்தித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஐயாவை பார்க்க வந்துள்ளேன் . நான் ஏமார்ந்து போய் விட்டேன். எனது சொத்தின் மதிப்பு ரூபாய் 90 லட்சம் ஆகும். இந்த சொத்து எனது தாய் சரோஜா அம்மாவின் மூலம் செட்டில்மெண்ட் சொத்தாகும். இந்த சொத்தை எனது தாயாரின் உறவினரான ராதாபாய் உறவினரான ரவிச்சந்திரன் போலி செட்டில்மெண்ட் மூலம் திருவெற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பிராடு செய்துள்ளான். இந்த போலி செட்டில்மெண்ட் மூலம் பாஸ்கர் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளனர் . இது சம்பந்தமாக ஷகிலா வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். பதிவு செய்யப்பட்ட கிரையங்கள் அனைத்தையும் பாஸ்கரின் அனைத்து ஆவணங்களும் ரத்து செய்யப்பட்டன . இது குறித்து நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸ் கமிஷனர் சங்கரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது . தனிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி நேர்மையாக விசாரணை நடத்தி குற்றவாளி ரவிச்சந்திரன் வயது 53 தகப்பனார் பெயர் தெய்வசிகாமணி மணலி புதுநகர் சென்னை என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . பின்பு பு ழல் சிறையில் அடைத்தனர். போலீஸ இன்ஸ்பெக்டர் வள்ளி ரவிச்சந்திரனை கைது செய்யும் போது மேடம் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கேயாவது தலைமறைவாகிக் கொள்கிறேன். உங்களுக்கு எத்தனை லட்சம் கேளுங்கள் என கெஞ்சினான் எதற்கும் மயங்காத வள்ளி குற்றவாளிடம் போலீஸ் பாணியில் பேசி உள்ளார்..