பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!

கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கோவை மே 8பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ந் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் . அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது :-மகளிர் போலீசார் குறித்து பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்த சவுக்கு சங்கர் மீது 5 பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. .இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை தேனி மாவட்ட போலீசார் கோவை மத்திய சிறைக்கு வந்து நேற்று கைது செய்தனர். அவரை இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோவை சிறையில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்..