கோவையில் தடுப்பு சுவரில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி…

கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் சன்ராம் ரானா மகர் (வயது 27)இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் பைக்கில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியனில் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.