மழை வேண்டி.. கோவை கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு..!

கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதே போல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி கட்சியினர் முட்டி போட்டு வழிபாடு செய்தனர்.

மழை இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் , பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் இந்து முன்னணி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முட்டி போட்டு வழிபாடு செய்து மழை பெற வேண்டினோம் என தெரிவித்தார்.