பஞ்சாப்பில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தான் மீண்டும் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எம்எல்ஏ-களின் வாரிகளுக்கு உள்ளாட்சியில் தலைவர் பதவி கிடைக்காது எனவும் தன் தலைமையில் யாருக்காவது அப்படி சலுகை கிடைத்தது என்றால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Leave a Reply