சின்னதடாகம் ஊராட்சி தலைவர் தேர்தல்: மீண்டும் அ.தி.மு.க ஆதரவாளர் வெற்றி..!

தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க ஆதரவு பெற்ற சுதா, அ.தி.முக ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர்.
திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அதிமுக ஆதரவு பெற்ற சவுந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.
இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து 24-ந் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 4 பென்டிரைவர்கள், சீலிடப்பட்ட கவரில் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் சமர்பிக்கப்பட்டது.
இன்று நீதிபதி ராஜசேகர் ஆய்வு செய்தார். அதில் அதிமுக ஆதரவாளரான சவுந்திரவடிவு 2,553 வாக்குகளும், தி.மு.க ஆதரவு பெற்ற சுதா 2,551 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் சவுந்திர வடிவு வெற்றி பெற்றார். இது செல்லும் என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.