அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருள் அதை உட்கொள்ளும் நபர்களை “ஜாம்பி” போன்று மாற்றும் உடல் தோற்றத்திற்கு கொண்டு சென்று துளைகள் ஏற்படும் அளவிற்கு அபாயகரமான நிலைக்கு கொண்டு செல்லகிறது.
இந்நிலையில்,கடந்த ஆண்டு அமெரிக்காவில் மக்கள் சிலபேர் நடைபிணங்கள் போல தெருவில் உலாவி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்பொழுது இது அமெரிக்காவில் பெரும் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது.இதற்கு மிகமுக்கிய காரணமான ட்ராங்க் டோப் மற்றும் ஜாம்பி மருந்து என்றும் அழைக்கப்படும் சைலாசின் எனப்படும் போதைப்பொருள்.
இது மயக்கமருந்து போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது.இதை உட்கொள்பவர்களுக்கு தீவிரமான தூக்கம், சுவாசக்கோளாறு,மன அழுத்தம் நிலையாக நிற்கமுடியாததன்மை கொண்டு செல்லும் அளவிற்கு ஆபத்தானது.
இந்த போதைப்பொருள் நாம் படங்களில் பார்க்கும் “ஜாம்பி” உடலில் சருமங்களை பாதிக்கும் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.இதனால் மருந்து உபயோகிப்பவரின் தோலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும், இது மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வேகமாக பரவி உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அளவிற்கு செல்லக்கூடியது.
இது புண்களுடன் தொடங்கி, எஸ்கார் எனப்படும் இறந்த சருமத்தை கடினப்படுத்துகிறது, மேலும் இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உறுப்பு துண்டிக்கப்படும் அளவுக்கு சென்றுவிடும் என்றும் இதற்கு மாற்றுமருந்தே கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், இந்த வருடமும் அதே போல் அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் மக்கள் விசித்திரமாக தெருவில் “ஜாம்பி போல” நடந்து வருகின்றனர். இந்த xylazine போதைப்பொருளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டதால் நிற்க முடியாத அளவுக்கு ஜாம்பி போன்று இருக்கும் நபர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட நபரை ஒருவர் கூறுகையில் “ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை, எனக்கு காயங்கள் இல்லை.ஆனால் இப்போது, என் கால்களிலும் கால்களிலும் துளைகள் உள்ளன என்று கூறியுள்ளர்.
xylazine முதன்முதலில் ஹெராயின்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது.பின்னர் அதன் பயன்பாடு இருப்பு ஃபெண்டானில் என்ற கொடிய போதைப்பொருளுக்கு வழிவகுத்தது.
பிலடெல்பியாவில் நகரத்தில் பயப்படுத்தப்பட்டது அதன் பின்னர் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு பரவியுள்ளது . இந்த ஜாம்பி மருந்து மற்ற மருந்துகளுக்குள் நுழைந்தால் அதிகப்படியான ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் 13 ஜாம்பி வைரஸ்களை ரஷ்யாவில் உள்ள ஒரு சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் ஏரியிலிருந்து கண்டறிந்தனர். சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையான ‘ஜாம்பி வைரஸ்’ புத்துயிர் பெற்றது.
Leave a Reply