தொழில் அதிபர் வீட்டில் ரூ.16 லட்சம் திருடிய ஊழியருக்கு போலீசார் வலை வீச்சு..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56) இவர் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருள் சப்ளை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 14ஆம் தேதி தொழில் சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அலமாரியில் இருந்த ரூ. 16 லட்சத்து 3, ஆயிரத்தை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் செல்வகுமார் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா வழக்கு பதிவு செய்து சகாதேவனை தேடி வருகிறார்கள்.அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராவை உள்ள பதிவுகளை ஆய்வு செய்தபோது சகாதேவன் அந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டம் விரைந்துள்ளனர்.