கோவையில் பட்டப்பகலில் துணிகரம்: தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி ,2 லட்ச பணம் திருட்டு..!!

கோவை :கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பாபு (வயது 34).இவர் அவினாசியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் சென்னைக்கு சென்றார். அதை தொடர்ந்து அவரது தந்தையும், தாயாரும் வெளியே சென்றனர் .இந்த நிலையில் ஹரிஷ் பாபு தன்னுடன் வேலை பார்க்கும் இளங்கோ என்பவரை அனுப்பி தனது வீட்டின் கதவுகளை பூட்டி வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று காலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாபுவுக்கு தகவல் கிடைத்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ் வளையல்கள், கம்மல், டாலர் செயின் உள்பட67 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.2லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கபட்டிருந்தது தெரியவந்தது இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.கொள்ளை நடந்த வீட்டைபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்த்தார்.கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.