கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள பி.என். புதூர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22 )நேற்று மதியம் 2.:30 மணிக்கு இவர் அங்குள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து வெள்ளையம்மாள் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
Leave a Reply