பஞ்சபடி நிறுத்தபட்ட வழக்கில் நீதிமன்றம் உடனடி உத்தரவு வழங்க வேண்டும்- தஞ்சையில் போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்கம் கோரிக்கை.!!

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்கம் திருச்சி மண்டல தலைவர் என்.மணி தஞ்சாவூரில் இன்று பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி, கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, விலைவாசிஉயர்விற்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ஓய்வூதிய விதிமுறைகளின்படி கொடுக்கப்பட்டு வந்த பஞ்சபடி உயர்வு 2015-ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் நியாயத்திற்கு அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்ததுடன், தி.மு.க ஆட்சி வந்ததும் 100 நாட்களில் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து,தேர்தல் வாக்குறுதியிலும் உறுதிப்படுத்தி ஆட்சிக்கு வந்து 800 நாட்களாகியும் நிறைவேற்றவும் இல்லை,வாய் திறக்கவும் இல்லை. ஓய்வூதியர்களின் பல்வேறு அமைப்புகள் உயர்நீதி மன்றத்தின் சென்னை மற்றும் மதுரை அமர்வுகளில் பல வழக்கு தொடுத்து, அரசு செய்யாததை நீதிமன்றம் செய்யாதா?-
-என ஏங்கி காத்தக்கொண்டு நிற்கின்றனர்.
இது வரையில் சட்டப்படியான பஞ்சபடி உயர்வு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள இறந்து விட்டனர். வழக்குகள் 8-ஆண்டுகளாக நடைபெற்று,முடிவுக்கு வராமல்,அனுமார் வால் போன்று நீண்டு கொண்டே போகிறது. கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும் எனில், நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறையும்-என அண்மையில் தமிழக அமைச்சர்களின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை மன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்ற ஆய்விற்கு உட்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஸ் நீதிமன்றத்தில் தனது வேதனையை வெளிப்படுத்திய செய்தியானது, ஊடகங்களில் வெளியாகி-நீதிபதியே நீதிபரிபாலனத்தின் மீது செய்த விமர்சனம் பொது வெளியில் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், நீதிபரிபாலன அமைப்பின் மீதான மக்களின் கோபம் நீதியரசர் வழியே வெளிப்பட்ட நிறைவு அனைவரும் ஏற்பட்டது.
பல ஆண்டு காலம் வழக்கறிஞராக, நீதிபதியாக பணியாற்றியவருக்கே நீதிதுறையின் மீது இத்தகு ஆதங்கம் இருக்குமெனில், ஆண்டுகணக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்து,நொந்து நூலாகி,வாழ்வின் பாதியை தொலைத்து,மரணத்தை எதிர் நோக்கி- நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள், நமது நாட்டின் நீதி பரிபாலனத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலையில் உள்ளனர். தற்போது வரையில் சுமார் 90,000ஆயிரம் ஓய்வூதியர்களின் வாழ்வாதார பிரச்சனை,
ஆயிரகணக்கானவர்கள் செத்த பின்னரும், பல ஆண்டுகளாக வழக்கு முடிவிற்கு வராமல் நிலுவையில் உள்ளதானது வேதனையானது. பஞ்சபடி உயர்வை கொடுத்துவிட வேண்டும்,அடுத்த வாய்தாவில் உத்திரவிடுவேன் என நீதிஅரசர் கூறி, மறுதேதிக்கு ஒரு வருடத்திற்கு முன் மாற்றிய அதே வழக்கு,
நீதிமன்ற அவமதிப்பாகி, அதுவே தற்போது LPA வழக்காகி, வாய்தாவிற்கு மேல் வாய்தாவாக காலத்தை கடத்திக்கொண்டு போகிறது. நீதிமன்றம், சட்டத்தின்படி தீர்ப்பிட கடமைபட்டதாகும்.! “அரசின் நிதிநிலை சரிஇல்லை,அது தான் காரணம்”- என்ற அரசின் முறையீடு ஏற்கபட்டதும், அரசின் வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியை கண்டு கொள்ளபடாததும் ஓய்வூதியர்களின் வேதனையை கூடுதலாக்கி உள்ளது. “அரசின் நிதிநிலை சரிஇல்லை,அது தான் காரணம்”- என்ற அரசின் முறையீட்டை ஏற்று,
ஓய்வூதிய காப்பகத்திற்கு மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையம் தர வேண்டிய பாக்கி பணம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குடன்
இந்த வழக்குடன் ஏன்பினைக்கபட வேண்டும்..?
ஆண்டிற்கு ரூ.12,000 கோடியில்,மகளிர் உரிமைத்தொகை வழங்க நிதி இருக்கும் அரசிற்கு,மாதம் ரூ.63/-கோடி ஓய்வூதியர்களுக்கு வழங்க முடியாதா?-என நீதிமன்றம் யோசிக்காதது ஓய்வூதியர்களுக்கு வியப்பை தருகிறது. “காலங்கடத்தும் அரசின் முயற்சிகளுக்கு, நீதிமன்றம் உடந்தையாகிறதோ.?”-
என 90,000 ம் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சந்தேகிப்பதற்கு நீதிமன்றம் வாய்ப்பளிக்காமல் உடனடியாக வழக்கை முடித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு
பஞ்சப்படி நிலுவையுடன் வழங்கிட நீதி அரசர்களும், உயர் நீதிமன்றமும் முன் வரவேண்டும் என்று அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் நலச்சங்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று என்.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.