கடையின் பூட்டை உடைத்து மெஷின்கள் கொள்ளை-கோவையில் துணிகரம்..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள நபி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34) இவர் அந்த பகுதியில் “ஆட்டோ பெயிண்ட் சோன்” என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது கடையில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கிரைண்டிங் மிஷின், வைப்ரேட்டர் மெஷின், கார் பாலிஷ் மெஷின் ,தையல் மெஷின் ,கார் வாஷிங் மெஷின், கார்பேட்டரி ஆட்டோ பேட்டரி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது..இது குறித்து போத்தனூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் பிரேம்தாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.