வீட்டின் முன் நிறுத்திய கார் எரிந்து நாசம்..!

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 49 ) இவரது காரை நேற்று அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.. அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் -.பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சுரேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.