தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் விவசாயிகள்

ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கோதுமை அறுவடை முடிந்துள்ள நிலையில், அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும் அரிசி சாகுபடியைத் தொடர முடியாமல் பாகிஸ்தான் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

1960-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகக் கருதப்படுவதால், இது நீடித்தால் அந்நாடு கடும் வறட்சியைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த நீர் நெருக்கடி பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாலும், இந்தியா தனது நிலையில் உறுதியாக உள்ளது. இதனால் பயங்கரவாதத்தை ஆதரிப்பதா அல்லது மக்களுக்குத் தேவையான தண்ணீரை உறுதி செய்வதா என்ற இக்கட்டான நிலைக்குப் பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.