பட்டப்பகலில் துணிகரம்… வங்கி பெண் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!

கோவை ராமநாதபுரம், போலீஸ் கந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ் .இவரது மனைவி கரன் சோபியா ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி கிளை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது கணவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டின் அருகில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மாயா என்பவர் கரன் சோபியாவுக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதை யடுத்து வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 23 கிராம் தங்க நகைகள், ரூ 35 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கரன் சோபியா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.