மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,80 லட்சம் கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,80,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகலிருந்து 2,10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து சரிந்ததால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 1,80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி தண்ணீரும், 16 கண் மதகு வழியாக 1,57,000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.050 அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 2,40,000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் படிப்படியாக நீர் வரத்து குறைந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்களுக்கு 1,80,000 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.