ரெப்போ விகிதம் மீண்டும் உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு..!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4% ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பிரச்னைகளால் இந்திய பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானது. சந்தையின் நிலையற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. 2022-23ல் பணவீக்கம் 6.7% என்று கணிக்கப்பட்டுள்ளது. Q1- 2023-24க்கான CPI பணவீக்கம் 5% என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது என்றும் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது எனவும் விளக்கமளித்தார்.ரெப்போ வட்டி உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் உயரும் என்ற அபாயமான சூழல் ஏற்பட்டுள்ளது.