கோவில் உண்டியல் உடைத்து நகை -பணம் திருட்டு…

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் அருள்மிகு ‘சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் பூஜை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் இரவு 9 மணிக்குபூஜை முடிந்தபின் கோவில் நடை சாத்தப்பட்டது. காலையில் கோவில் பூசாரி நடையை திறக்க வந்த போது கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி இதுகுறித்து செயல்அலுவலர் ரமேஷுக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனே அங்கு சென்று பார்த்தார். இது குறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் .அதில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டிருந்தது. கோவிலில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவிறக்க காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 2 -30 மணி அளவில் கோவிலுக்குள் ஒருவர் வருவதையும் அவர் அங்கிருந்து உண்டியலை உடைத்து நகை-பணத்தை திருடுவதும் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆ சாமியைதேடி வருகிறார்கள்.எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இந்த கோவிலில் நடந்து கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.