கோவையில் தடையை மீறி விற்பனை செய்த 15 கிலோ இறைச்சி பறிமுதல்…

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து நேற்று மாட்டுப்பொங்கல்- மற்றும் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக கோவை மாநகரில் உள்ள கோழி மற்றும் மட்டன் இறைச்சி கடைகள் மீன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் ஒரு சிலர் இந்த தடையை மீறி இறைச்சிகளை விற்பனை செய்தனர். இதனை யடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் மாநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .இதில் தடையை மீறிஇறைச்சி விற்பனை செய்த கடைக்காரர்களிட மிருந்து 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது .இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ மட்டன் ,5 கிலோ கோழிஇறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.