பனாமா-கொலம்பியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 பதிவு..!

னாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பனாமா-கொலம்பியா எல்லையின் அருகே உள்ள கரீபியன் கடலில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், ”பனாமா-கொலம்பியா எல்லையில் கரிபீயன் கடலில் 6.6 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.” என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.