தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை கோவை வருகை..!

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நாளை மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார் . விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.. பின்னர் காரில் ஊட்டி புறப்பட்டு செல்கிறார்.ஊட்டியில் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய தினத்தில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.வருகிற 9-ந்தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.கவர்னரின் வருகையையொட்டி கோவையிலும், நீலகிரி மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.