கோவை – பெங்களூர் இடையே இரவு நேர ரயில் இயக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.!!

கோவையில் இருந்து சென்னை நெல்லை மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னை சேலம் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை, பெங்களூரில் இடையே ஒரே ஒரு பகல் நேர உதய எக்ஸ்ப்ரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன எனவே தொழில் மற்றும் கல்வி தேவைக்காக வந்து செல்ல வசதியாக கோவை பெங்களூர் இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கோவை தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தென்னக ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறும் போது:-

கோவை – பெங்களூர் இடையே இயக்கப்பட்ட ஜலண்டு எக்ஸ்பிரஸ் கோவை, பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்பொழுது கேரளா மாநிலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே கோவை, பெங்களூர் இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோவை வர்த்தக அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இரவு நேர ரயிலுக்கு பதிலாக இரண்டு பகல் நேர உதய எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் மூன்று ரயில்களிலும் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது இதனால் கோவையில் இருந்து யாரும் ஏற முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி கோவை, பெங்களூர் இடையே ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஆம்னி பேருந்துகள் மட்டும் கோவை, பெங்களூர் இடையே தினமும் 50 ஆம்னி பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது. இதில் கட்டணமாக 1,500 முதல் 1,700 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் தவிர்த்து தமிழக அரசு பேருந்துகள்| கர்நாடகா அரசு பேருந்துகள், கேரளா அரசு பேருந்துகள் பெங்களூருக்கு இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து பெங்களூர் ரயில் விட முடியாது ஏனென்றால் கர்நாடகாவில் வட மாவட்டங்களில் இருந்து ஒரு நகரத்திற்கு இரவு நேர ரயில் விடலாம் அல்லது பெங்களூரு அதிகாலையில் செல்லும் ரயில்களில் ஒன்றை கோவையில் இருந்து புறப்படு செல்லலாம் கர்நாடகா வட மாநில வட மாவட்ட நகரங்களுக்கு தேவைக்கும், வர்த்தகம் மற்றும் விவசாய ரீதியாக நீண்ட நாட்களாக நல்ல தொடர்பு உள்ளது எனவே இரு மாநில மக்களின் நலன் கருதி உடனடியாக கோவை, பெங்களூர் இடையே இரவு நேர ரயில் விட வேண்டும் என்றும் கூறினார்.