பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி..!

டெல்லி: பாலியல் வன் கொடுமையால் உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவேன்றுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

27 வார கருவை கலைக்க அனுமதி வேண்டும், குஜராத் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்ட நகல்கள் உள்ளிட்டவற்றை முறையாக வழங்கவில்லை இதனால் கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதியை பெறுவது தாமதமாகி கொண்டே செல்கிறது என்ற குற்றசாட்டை வலியுறுத்தியும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவசர வழக்காக சனிக்கிழமை சிறப்பு அமர்வு அமைத்து நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை பெண்ணிற்கு உரிய சிகிச்சைகள் செய்து கருக்கலைப்பு செய்ய முடியுமா, இயலாதா என்பதற்கான உத்தரவை மருத்துவக்குழுவிற்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

அதனடிப்படையில் மருத்துவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவும் கருகலைப்பு செய்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. எனவே அதற்கான பரிந்துரையை மருத்துவர் குழு எழுத்துபூர்வமாக உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை வழங்கியிருந்தனர்.

அதனடிப்படையில் இன்று காலை மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கருகலைப்பு செய்வதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

அத சமயம் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு கடுமையான கண்டனங்களையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பிறப்பிக்கபட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து குஜராத் நீதிமன்றத்தின் நீதிபதி கூடுதல் உத்தரவை பிறப்பித்ததாகவும், அந்த உத்தரவை என் அவர் பிறப்பித்தார் என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

மருத்துவ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கருகலைப்பு செய்யப்படும் எனவும் மனுதாரர் இன்று மாலை அல்லது நாளை காலை 9 மணிக்குள் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகலாம் எனவும் நீதிபதி நாகரத்தினா தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.