மருத்துவமனை பெண் ஊழியர் நிர்வாண நிலையில் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்- காதலன் கைது..!

கோவை: நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி மருதகுளம்பட்டி குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மேகலாப்பிரியா(வயது26) கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். ரத்தினபுரியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மேகலாபிரியா வேலைக்கு செல்லவில்லை.
அக்கம் பக்கத்தினர் அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரமாக பூட்டிகிடப்பதை பார்த்து தட்டி உள்ளனர். உள்ளே மின்விசிறியில் நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் பசினா பீவி,
இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மேகலா பிரியாவின் காதலன் பிரசாந்த் (வயது 25) இன்று கைது செய்யப்பட்டார். இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள கோபாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மேகலா பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் ,தீண்டாமை ஒழிப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.