வீடு கட்டி தருவதாக கோவை பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி- டுபாக்கூர் தம்பதி மீது வழக்கு..!

கோவை ராம்நகர் செங்குப்தா வீதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகள் மணிஷா(வயது 23) பிளே ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரிடம் மயிலம்பட்டி யை சேர்ந்த அன்புச்செல்வி அவரது கணவர் மாரியப்பன் ஆகியோர் காளப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் முருகன் நகரில் வீடு கட்டி தருவதாக ரூ.32 லட்சம் வாங்கினார்கள். பல மாதங்கள் ஆகியும் வீடு கட்டி கொடுக்கவில்லை.பணத்தை மோசடி செய்து விட்டனர். இது குறித்து மணிஷா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி வேலம்பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்த அன்புச்செல்வி அவரது கணவர் மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கணவன். மனைவியை தேடி வருகிறார்கள்.