ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்தார்கள்- டாக்ஸி ஓட்டுனர் போலீசாரிடம் தகவல்..!

கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாரிடம் தெரிவித்தார்.

புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

நியூஸில் முகமதுஷாரிக் தனது வாட்ஸ் அப் DP யில் ஈஷா ஆதியோகி சிலை வைத்திருந்ததாக இரு தினங்களுக்கு செய்தி வெளியானதை பார்த்த போது தனக்கு நினைவிற்கு வந்ததாகவும் டாக்ஸி ஓட்டுனர் ஆனந்த் தகவல்

இது குறித்து நேற்றிரவு போலீசார் ஆனந்தை விசாரித்ததுடன், விசாரணைக்கு வரும் படி அழைத்துள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஈஷா மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தீபாவளியன்று காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான காட்சிகளை பரிசோதித்து பார்த்தால் அதில் அந்த நபர்கள் இருப்பார்கள் எனவும் ஆனந்த் தகவல் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தீபாவளி தினத்தன்று முகமது ஷாரிக் பயன்படுத்திய மொபைல் கர்நாடக மாநிலத்தில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

எனினும் கால்டாக்ஸி ஓட்டுனர் ஆனந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.