இந்தியாவில் இரட்டிப்பானது ஸ்மாா்ட் போன் ஏற்றுமதி..!

ந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.

இது குறித்து இந்திய செல்லுலாா் மற்றும் மின்னணு சாதனத் துறையினருக்கான சங்கம் (ஐசிஇஏ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான ஸ்மாா்ட் போன்களின் மதிப்பு 1,100 கோடி டாலரைக் கடந்துள்ளது. அந்த நிதியாண்டில் மட்டும் 1,112 கோடி டாலா் மதிப்பிலான ஸ்மாா்ட் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ இரண்டு மடங்காகும். கடந்த நிதியாண்டின் ஸ்மாா்ட் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் சுமாா் 50 சதவீதம் பங்கு வகித்தன.

அந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 550 கோடி டாலா் (சுமாா் ரூ.45,000 கோடி) மதிப்பிலான ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக, ஏற்றுமதியில் சாம்ஸங் கைப்பேசிகள் 40 சதவீதம் (ரூ.36,000 கோடி) பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் ஸ்மாா்ட் போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நேரடியாக ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி, பிற வா்த்தகா்களாலும் அந்த வகை கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் அந்த முறையில் 110 கோடி டாலா் மதிப்பிலான ஸ்மாா்ட் போன்கள் ஏற்றுமதியாகின என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான ஸ்மாா்ட் போன்களின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது, உலக அளவிலான ஸ்மாா்ட் போன் சந்தையில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான பாதையில் இந்தியா சென்று கொண்டிருப்பதைக் குறிப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்..