கோவையில் நாளை ஒருங்கிணைந்த ராணுவ எழுத்து தேர்வு..!

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு (தொகுதி 1) நடத்தப்படுகிறது .இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள்,தாசில்தார் நிலையில் தலா ஒரு தேர்வு மைய ஆய்வாளர் துணை தாசில்தார், நிலையில் 8 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள் 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வை பார்வையிடும் வகையில் செயலர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ,சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டுடன் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய மத்திய மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஒரு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது..