கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்.

கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், வனத் துறையினர். அந்த யானை கூட்டத்தை மதுக்கரை வனப் பகுதிக்கு விரட்டினர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தேவராயபுரம், வண்டிக்காரன்புதூர், விராலியூர், தாளியூர் கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளியை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தாளியூர் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை நாகராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தி விட்டு வெளியே வர முயன்ற போது தோட்டத்தை சுற்றியும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு இருந்ததால், அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துக் கொண்டு யானை வெளியே வந்தது. இதை அடுத்து நரசீபுரம் சாலையில் அந்த ஒற்றை யானை நடந்து சென்று வனப் பகுதிக்குள் புகுந்தது.

ஒற்றைக் காட்டு யானை இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடும் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.