விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு சில இடங்கள் குறைவாக உள்ள நிலையில், கூட்டணி ஆதரவு பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தமிழக வெற்றிக்கழகம் கேட்டது. தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்தன. இருப்பினும் திமுகவோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஐந்து பேர் வெற்றி பெற்றனர்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் தங்களது தரப்பில் உள்ள பல்வேறு கட்சியினரிடம் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு கேட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகால திமுக உறவை முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் தரப்பில் முக்கியமான ஆலோசனை நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் கடிதத்தை வழங்குகிறது காங்கிரஸ். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் கையெழுத்திட்ட கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிடம் காங்கிரஸ் கட்சி வழங்குகிறது. இதன் மூலம் திமுக உடனான உறவு காங்கிரசுக்கு முறிந்துள்ளது.
விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு சில இடங்கள் குறைவாக உள்ள நிலையில், கூட்டணி ஆதரவு பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.





