தேசிய நெடுஞ்சாலை இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்று ரூ. 86 லட்சத்தை சுருட்டிய நம்பர் ஒன் கேடிகள் கைது.!!

சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருபவர் தினேஷ் ராஜன் காலி மனை ஒன்றை வாங்க நினைத்து புழல் காவல்துறை குடியிருப்பில் குடியிருந்த போது சகிலா என்கிற பானு கணவன் பெயர் இஸ்மாயில் என்பவன் அவனது குழந்தைகள் சோபியா ஆயிஷா மற்றும் வசந்தகுமார் தகப்பனார் பெயர் பாஸ்கரன் என்பவர்கள் அறிமுகமானார்கள் அவர்களிடம் காலி மனை பற்றி கேட்டதற்கு பத்து வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தற்போது அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு ஜாஸ்மின் நகரில் 3253 சதுர அடி காலி மனை இருப்பதாகவும் அ ந்த இடத்திற்கு பவர் ஏஜென்டாக வசந்தகுமார் உள்ளார்  என பேசி மேற்பட்ட இடத்தை அம்பத்தூர் சார்பதிவாளர் மூலமாக வசந்தகுமார் என்பவன் பொது அதிகாரம் பெற்று கிரையம் செய்து தினேஷ் ராஜனுக்கு கொடுத்துள்ளான். வசந்தகுமார் ஒரிஜினல் ஆவணங்களை தினேஷ் ராஜனுக்கு கொடுக்கவில்லை . இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 85 லட்சத்து 72 ஆயிரம் ஆகும். தினேஷ் ராஜனும் பட்டா பெறுவதற்காக மாதவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்த போது இந்த இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நில ஆஜிதம் செய்யப்பட்டு விட்டது பட்டா வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இதனால் வெறுத்துப் போன தினேஷ் ராஜன் நான் கொடுத்த பணத்தை கொடுங்கள் என கேட்க எங்களால் பணத்தை திருப்பி தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ள என மிரட்டி உள்ளனர். திணேஷ் ராஜனுக்கு அசலு ம் வட்டியுமாக சேர்த்து ரூபாய் 1 கோடியே 35 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்..