பிளஸ் டூ தேர்வை மன தைரியத்துடன் எழுத மாணவ மாணவிகள் 14417 எண்ணை தொடர்பு கொள்ளலாம் – பள்ளி கல்வித்துறை.!!

பிளஸ் டூ மாணவ மாணவிகள் மன தைரியத்துடன் 14417 என்னை தொடர்பு கொள்ளவும் என்று தமிழக அரசு சார்பிலும் பள்ளி கல்வித்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், உயர்கல்வி குறித்தும் ஆலோசனை வழங்குவதற்காகவும், பள்ளி தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டு 14417 என்கிற உதவி எண் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான இந்த உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள், மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை 14417 எண்ணிற்கு தொடர்புகொள்வதன் மூலம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லாத நிலையில், நாளுக்கு நாள் இந்த எண்ணிற்கான விழிப்புணர்வுகள் அதிகரிக்க தொடங்கின. இந்நிலையில்தர்ன, பள்ளி வளாகங்களில் நடைபெறும் பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவர்கள் 14417 எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதுடன் பள்ளி வளாகங்களில் எழுதப்பட்டு, புத்தகங்களிலும் இந்த எண் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் முத்திரையிடப்பட்டது.

மாணவர்கள்: இதற்கு பிறகு, பள்ளிக்கல்வி உதவி எண்ணுக்கு அழைப்புகள் மாணவர்களிடம் இருந்து அதிகளவில் வரத்தொடங்கியிருக்கின்றன. மேலும், ஆங்கேங்கே பள்ளி வளாகங்களில் நடைபெறும் குற்றங்களும் குறைய துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இன்று தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் ஆரம்பமாகின்றன.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத போகிறார்கள். தமிழ்நாட்டில், 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 3200 பறக்கும் படைகளுடன், நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  வருகிற 22-ந்தேதி வரை இந்த தேர்வு நடக்க போகிறது. எனவே, பிளஸ்-2 எழுதும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டருந்த நிலையில், இப்போதும் இந்த எண்ணில் ஆலோசனைகளை கேட்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டும், இந்த உதவி எண்ணில் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றுள்ளார்களாம்.

அதேபோல, கடந்த மாதம் சுமார் 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் 14417 உதவி எண்ணில் பேசி மன அழுத்தத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்கள். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக மன நல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பதற்கும் தமிழக அரசு அப்போது ஏற்பாடு செய்திருந்தது. அந்தவகையில், இந்த உதவி எண்ணில் தேவைப்படும் மாணவ-மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வுக்கு பயப்படும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணை பயன்படுத்தி, கடைசி நிமிடத்தில் பதட்டமும் பரபரப்பை தவிர்த்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.