திருச்சி சிறுமியை சீரழித்த இரண்டு மனித மிருகங்கள்.!!

திருச்சியை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி. திருச்சியிலேயே பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 19ம் தேதி சிறுமியை பெற்றோர் ஏதோ திட்டிவிட்டார்களாம். உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
முதலில், திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பஸ் ஏறி இருக்கிறாள். ஆனால், ராத்திரி நேரமாகிவிட்டதால், அங்கிருந்து இன்னொரு பஸ் ஏறி, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறாள்.
கோவை நபர்: சிறுமி தனியாக பஸ்ஸில் இருப்பதை பார்த்த ஒரு நபர், நைஸாக பேச்சு தந்திருக்கிறார். அப்போதுதான், வீட்டை விட்டு கோபித்து கொண்டு வந்துவிட்டது அந்த நபருக்கு தெரிய வந்தது. உடனே சிறுமியை வேறு ஒரு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு, கோவைக்கு சென்றிருக்கிறார். கோவையிலிலேயே லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில், சிறுமியிடம் பணத்தை தந்து, திருச்சிக்கே பஸ் ஏறி சென்றுவிடுமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
மணப்பாறை: அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சிறுமிக்கோ, இப்போதும் தன்னுடைய பெற்றோர் மீது கோபம் தீரவில்லை.. அதனால், வீட்டுக்கு போகவும் விரும்பவில்லை.. அதனால், மணப்பாறையில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்.. பிறகு மணப்பாறைக்கு பஸ்ஸில் வந்து இறங்கினார்.. ஆனால், பஸ் ஸ்டாண்டில் வந்ததுமே, சொந்தக்காரர் வீட்டுக்கு போக வழி தெரியவில்லை.. அங்கேயே நின்று திருதிருவென விழித்திருக்கிறார்.
இதைப்பார்த்த ஒரு நபர், சிறுமியிடம் வந்து பேச்சு தந்திருக்கிறார். அவரிடம், தன்னுடைய சொந்தக்காரர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி பெயரை சொல்லி உள்ளார். அந்த நபரும், சொந்தக்காரர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, அந்த பெண்ணை கடைகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. சிறுமிக்கு டிரஸ், செருப்பு வாங்கி தந்து, நேராக லாட்ஜ்ஜூக்கு அழைத்து சென்று, பலாத்காரமும் செய்திருக்கிறார்.
இதற்கு நடுவில், சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் திருச்சி போலீசில் புகார் தரவும், போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மணப்பாறை லாட்ஜில் சிறுமி உள்ள தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதையடுத்து அதிரடியாக லாட்ஜில் நுழைந்த போலீஸ், சிறுமியை அங்கிருந்து மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணையும் நடத்தினர்.
அப்போதுதான் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியது முதல் அத்தனை சம்பவத்தையும் வாக்குமூலமாக கூறினார். மணப்பாறையில் டிரஸ், செருப்பு வாங்கி தந்து லாட்ஜ்ஜூக்கு அழைத்து சென்றவர் பெயர் முல்லை முருகேசன் 45 வயதாகிறதாம். இவரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.
ஆனால், கோவைக்கு அழைத்து சென்ற லாட்ஜில் ரூம் போட்டவர் யார் என்றே தெரியாதாம்? அவர் பெயரும் தெரியாது, ஊரும் தெரியாது என்கிறாள் அந்த குழந்தை. இதையடுத்து, அந்த நபரை தனிப்படை வைத்து போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். கல்வி, தொழில்நுட்பம் எவ்வளவுதான் பெருகினாலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கலக்கம் இன்னமும் கவ்வியபடியே உள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டியிருக்கிறது.
நாட்டின் வருங்காலமாகத் திகழும் – பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் – அவர்களின் எதிர்காலத்திற்கும் சிறு துரும்பளவு கூட ஆபத்து நேராத வண்ணம், பெண் குழந்தைகளின் கண்ணியம் காப்பாற்றப்படியிருக்கிறது.. இதற்கான விழிப்புணர்வுகளை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது