ஓடும் ரயிலில் தங்க சங்கிலியை அபேஸ் செய்த கொள்ளையன் கைது.!!

சமீப காலமாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ஆகிய ரயில்களில் இருந்து சேலம் தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டியில் பெண் பயணிகளிடம் தாலி செயின் பறிப்பு மற்றும் விலை உயர்ந்த உடைமைகள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சேலம் தர்மபுரி ஓசூர் ரயில்வே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த கொள்ளை சம்பவங்களில் சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 1 வது பிளாட்பார்மில் தாதர் விரைவு ரயில் வந்து நின்ற சமயம் பினாக் நாயக் வயது 33 தகப்பனார் பெயர் மகா ஜென் நாயகக் பராக்கமா கிராமம் கந்தமாலா மாவட்டம் ஓடிசா மாநிலம் இந்த குற்றவாளி மணிவேல் தகப்பனார் பெயர் வடிவேல் பழைய சூரமங்கலம் சேலம் என்கிற பயணியிடம் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றுள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா அறிவுரை வழங்கியதில் தமிழக ரயில்வே போலீஸ் கில்லாடி போலீஸ் எதற்கும் சளைக்காத சூப்பர் போலீஸ் என்ற பெயரை இந்தியாவிலேயே நற்பெயரை தட்டி செல்ல வேண்டும் குற்றவாளியை இரண்டு மணி நேரத்திற்குள் பிடிக்காத வேண்டும் கொள்ளையனிடமிருந்து அனைத்து பொருட்களை மீட்க வேண்டும் என்ற கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார் .ரயில்வே போது ராமர் போலீஸ் சூப்பிரண்டு அன்பு சேலம் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் பணி போலீஸ் படை அமைக்கப்பட்டது . அவர்கள் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் எதிரே அஸ்வா பார்க் ஹோட்டல் அருகில் பினை நாயக் என்பவன் அடுத்த ரயிலில் நவீன முறையில் கொள்ளையடிக்கலாம் என்ற திட்டத்தை தீட்டி ஆலோசித்துக் கொண்டிருந்த போது அதிரடி போலீஸ் படையினர் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர் .சேலம் ஓசூர் தர்மபுரி மற்றும் பல்வேறு ரயில்களில் தங்கச் சங்கிலி விலை உயர்ந்த உடமைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது. ஏழு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அவற்றின் மதிப்பு ரூபாய் 12 லட்சம் ஆகும் அவனிடத்தில் இருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்..