.ரூ 450 கோடியில் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம் பணிகள் மார்ச் மாதம் முடிவடையும்…அதிகாரிகள் தகவல் …

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி தற்போது ஆத்துதுப்பாலத்தில் இறங்கு தளம் மற்றும் ஏறுதளம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுபோல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் இறங்கும் தளம் அமைக்கும் பணி முழுக்க நடந்து வருகிறது. 6 ஆண்டுகளாக நடந்துவரும் உக்கடம் மேம்பாலம் பணி குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- உக்கடம் மேம்பால இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில்நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் மார்ச் மாதத்துக்குள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும். ‘இதன் மூலம் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.