கோவையில் மழைக்கு திருமண மண்டபத்தில் ஒதுங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு காவலாளி போக்சோவில் கைது..!

கோவை:பெரியநாயக்கன்பாளையம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது காற்றுடன் நல்ல மழை பெய்தது .இதனால் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த தனியார் மண்டபம் அருகே போய் நின்று உள்ளார். அப்போது அந்த திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சாமி செட்டிபாளையம் தென்றல் நகரை சேர்ந்த நடராஜன் ( வயது 73 ) என்பவர் மழையில் நனைய வேண்டாம். உள்ளே வந்து நில்லுங்கள் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னம் காவலாளி நடராஜனை கைது செய்தார்.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.