பிரபல வங்கி மீது நடவடிக்கை எடுத்த ரிசர்வ் பேங்க்.!!

கோடக் மஹிந்திரா வங்கி, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு, இந்தியாவின் 5வது பெரிய தனியார் வங்கியாகும்.

கோடக் மஹிந்திரா வங்கி இந்தியாவில் முதன்முதலில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் கணக்கு திறப்பு, கேவைசி  விண்ணப்பம் போன்ற அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும். இந்நிலையில், கோடாக் மஹிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் ஆக்டிவேஷன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கும் ஆன்லைனில் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் ஆர்பிஐ தடை விதித்துள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதற்காக கோடக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோடாக் மஹிந்திரா வங்கியில் மற்ற சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..